News March 4, 2025
நாட்டின் சிறந்த சிற்பக் கலைஞர் காலமானார்

நாட்டின் மிகச்சிறந்த சிற்ப, ஓவியக் கலைஞரான ஹிம்மத் ஷா (92) ஜெய்ப்பூரில் காலமானார். வெகுஜனப் பரப்பில் அறியப்படாமல் இருப்பினும், இந்திய நவீன கலை உலகில் இவருக்கு தனிச் சிறப்பு உண்டு. கல், களிமண், காகிதம் என கையில் கிடைக்கும் எதையும் உயிர்ப்புள்ள கலைப் படைப்பாக மாற்றும் திறன் கொண்டவர் இவர். பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். இவரின் வெள்ளி இலை, தாமிர தலைகள் மற்றும் டெரகோட்டா சிற்பங்கள் புகழ்பெற்றவை.
Similar News
News March 4, 2025
அதிர்ந்தது பிஹார் சட்டமன்றம்- தலைவர்கள் வார்த்தை போர்!

பிஹார் சட்டமன்றத்தில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மோதல் முற்றியதால், முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிரான வார்த்தைகளை உங்கள் தந்தை பயன்படுத்தியதாக தேஜஸ்வி கூறினார். இதற்கு பதிலளித்த சாம்ராட், உங்கள் தந்தை லாலு இந்த மாநிலத்தை கொள்ளையடித்தார் என சாடினார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
News March 4, 2025
இத்தனை கொடூர மனிதர்களா? மோடி ஆவேசம்

குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடி, இன்று வந்தாராவில் உள்ள விலங்குகள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றும் பாகன்களால் சித்ரவதைக்கு உள்ளான யானைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், மனிதர்களால் எப்படி இவ்வளவு கொடூரமாக நடக்க முடிகிறது? இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மதுபானம் தரும் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம், ஜாக் டானியல்ஸ். இது மாதா மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு Daniel’s Old No. 7 விஸ்கி பாட்டிலையும் ப்ரீயாக தருகிறது. டென்னஸி மாகாணத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ள மூர் கவுன்ட்டியில், மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆகவே, ஊழியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவ கொண்டுவந்த இப்பழக்கம், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.