News March 18, 2025
உலகின் முதல் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்ட நாடு

கச்சா எண்ணெய் என்றதும் சவுதி அரேபியா, ஈரான், ஈராக் போன்ற நாடுகளே நமது நினைவுக்கு வரும். ஆனால் உலகில் முதன்முதலில் எண்ணெய் வளம் அந்நாடுகளில் கண்டுபிடிக்கப்படவில்லை. அஜர்பைஜானின் பாகு நகர் அருகே 1846இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எண்ணெய் கிணறு தோண்டப்பட்டு எண்ணெய் உற்பத்தி தொடங்கியது. 1899 வரை உலகிற்கு தேவையான பாதி கச்சா எண்ணெய்யை அந்நாடே உற்பத்தி செய்தது.
Similar News
News July 7, 2025
PLEASE இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்

இதய நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்: சோர்வு -திடீரென அதிக களைப்பாகவும் சோர்வாகவும் உணர்வது *காரணமின்றி தலைச்சுற்றல் & மயக்கம் *தூங்குவதில் சிரமம் -படுக்கையில் நேராகப் படுத்திருக்கும்போது தூங்குவதற்கு கடினமாக உணர்வது *கால் வீக்கம் *உடல் எடை வேகமாக அதிகரித்தல் *தொடர் சளி & இருமல். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
News July 7, 2025
குஜராத்தில் பிரம்மாண்ட விண்வெளி மையம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ₹10,000 கோடி செலவில் குஜராத்தில் பெரிய விண்வெளி மையத்தை அமைக்கவுள்ளது. குஜராத் மாநிலம் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால், ராக்கெட் ஏவுதலின் போது எரிபொருள் நுகர்வு குறைவாக இருக்கும் என்பதால் இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-5, ககன்யான், சுக்கிரன் திட்டம் போன்றவற்றுக்கு இந்த மையம் முக்கியமானதாக இருக்கும்.
News July 7, 2025
பாஜகவினரை வைத்துக் கொண்டே EPS செய்த சம்பவம்!

2026-ல் அதிமுக ஆட்சி அமையும் என மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் உறுதியாக தெரிவித்துள்ளார். பாஜகவினர் கூட்டணி ஆட்சி என பேசி வரும் நிலையில், இபிஎஸ் பாஜகவினரை வைத்துக் கொண்டே அதிமுக ஆட்சி என்பதை திட்டவட்டமாக கூறியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனும் கூட்டணி ஆட்சியே அமையும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கூட்டணி ஆட்சி அமையுமா?