News May 27, 2024
வாக்கு எண்ணிக்கைக்கான பணிகள் தீவிரம்

வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர் ஈடுபடுவர் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். காலை 8 மணிக்கு தபால் வாக்கு, 8.30 மணிக்கு மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும், அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணிக்கைக்கு 3,300 மேஜைகள் அமைக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணும் பணி கேமராவில் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News March 23, 2026
A-10 தண்டர்போல்ட்-ஐ களமிறக்கிய அமெரிக்கா

அமெரிக்கா தனது பழமையான A-10 தண்டர்போல்ட் II போர் விமானத்தை களமிறக்கியுள்ளது. பறக்கும் டாங்க் என்று அழைக்கப்படும் இது ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானின் அதிவேக கப்பல்களை துல்லியமாக தாக்க பயன்படுத்தப்படுகிறது. குறைந்த உயரத்தில் மெதுவாக பறந்து துல்லியமாக தாக்குவதில் இதற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும், இது நவீன விமானங்களை விட செலவு குறைந்ததாக உள்ளதாம்.
News March 23, 2026
AI போட்டியில் சீனா வெற்றி பெறலாம்: எலான் மஸ்க்

AI போட்டியில் சீனா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். இருப்பினும் அமெரிக்காவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இது வெறும் தொழில்நுட்ப போட்டி மட்டுமல்ல, உலக வல்லரசு யார் என்பதை தீர்மானிக்கும் யுத்தமாக பார்க்கப்படுகிறது. AI தொழில்நுட்பத்தில் உலக நாடுகளை வழிநடத்தப்போவது யார் என்பதில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.
News March 23, 2026
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

*வாழ்க்கையை கண்டு நீங்கள் பயப்படாவிட்டால், அது மிகவும் அழகானது. *கீழே பார்த்துக் கொண்டிருந்தால், நீங்கள் ஒருபோதும் வானவில்லைக் காண முடியாது. *கற்பனை, செயல் இல்லாமல் அர்த்தமற்றது. *இந்த உலகில் எதுவும் நிரந்தரமல்ல, நம் கஷ்டங்கள் கூட. *நீங்கள் உங்களை நம்ப வேண்டும், அதுதான் வாழ்வின் ரகசியம்.


