News August 12, 2024

பள்ளி பாட புத்தகங்களின் விலை உயர்ந்தது

image

தமிழகத்தில் 1-12ஆம் வகுப்பு வரை, பாட புத்தகங்களின் விலையை பாடநூல் கழகம் உயர்த்தியுள்ளது. பள்ளி மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 5 கோடி பாட புத்தகங்கள் விநியோகிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படுகிறது. பிறருக்கு கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பாட புத்தகங்களின் விலை ₹150-₹340 வரை உயர்ந்துள்ளதால் தனியார் பள்ளிகள், மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 7, 2026

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

News March 7, 2026

BIG NEWS: தமிழகத்தை உலுக்கிய ரேப் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

image

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், தவசி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.

News March 7, 2026

சுயதொழில் தொடங்க லோன் வேண்டுமா? இதோ திட்டம்

image

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் தொடங்க ₹2 லட்சம் கடன் வழங்குகிறது புதிய ஸ்வர்ணிமா திட்டம். இதனை திருப்பி செலுத்த 3 – 8 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். விண்ணப்பிக்க https://nsfdc.nic.in/channel-patrners/scas என்ற இணையதளத்தை பார்வையிடவும். உங்க வீட்டு பெண்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!