News February 16, 2025
மும்மொழிக் கொள்கையின் முரண்

பள்ளிகளில் மாணவர்கள் ஏதேனும் ஒரு மாநில மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்வு செய்து படிக்கலாம் என்கிறது புதிய கல்விக் கொள்கை. ஆனால், நடைமுறையில் 95 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்தியையே மூன்றாவது மொழியாக தேர்வு செய்கின்றனர். நாடு முழுவதும் இந்தி பரவியிருப்பது, மற்ற மொழிகளுக்கு ஆசிரியர்கள் இல்லாமை ஆகிய காரணிகள் மற்ற மொழிகளை பின்னுக்குத் தள்ளி இந்தியை முதன்மைப்படுத்துகிறது.
Similar News
News December 27, 2025
கூலி படத்தின் விமர்சனத்தை ஏற்ற லோகேஷ்

‘கூலி’ படத்திற்கு ஆயிரம் விமர்சனங்கள் வந்தது, அதை தான் ஏற்றுக்கொண்டதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ரஜினி உள்பட மல்டிஸ்டார் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இதுபற்றி பேசியுள்ள லோகேஷ், விமர்சனங்களில் இருந்து கற்று, அடுத்த படத்தில் அவ்வாறு செய்யக்கூடாது என்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மீண்டும் கம்பேக் கொடுப்பாரா லோகேஷ்?
News December 27, 2025
நாளை டிரம்ப்பை சந்திக்கிறார் ஜெலன்ஸ்கி

நாளை USA-ன் ஃபுளோரிடாவில் அதிபர் டிரம்பை சந்திக்கவுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப்பால் முன்மொழியப்பட்ட 20 நிபந்தனைகளில் 90%-ஐ ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த சந்திப்பின்போது வர்த்தகம் உள்பட பிற விவகாரங்கள் பற்றியும் பேசவுள்ளதாக தெரிவித்துள்ளார். விரைவில் போர் முடிவுக்கு வருமா?
News December 27, 2025
புத்தர் பொன்மொழிகள்

*மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
*எப்படி எதிர்வினையாற்றுவது என்று கற்றுக்கொள்ளாதீர்கள். எப்படி பதிலளிப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
*எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது. பிறகு ஏன் நிரந்தரமற்ற விடயங்களுக்காக கவலைப்பட வேண்டும்.
*நாம் எங்கு சென்றாலும், எங்கிருந்தாலும், எங்கள் செயல்களுக்கான விளைவுகள் நம்மைப் பின்தொடர்கின்றன.


