News March 25, 2024
ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை வெளியானது

2024 ஐபிஎல் தொடரின் முழு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட முதற்கட்ட அட்டவணையில் 21 போட்டிகள் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது 74 போட்டிகள் கொண்ட முழு அட்டவணையும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2ஆம் கட்ட போட்டிகள், ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 21- குவாலிபையர் 1, மே 22- எலிமினேட்டர், மே 24- குவாலிபையர் 2, மே 26- இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
Similar News
News December 25, 2025
வன்முறை கும்பலை அடக்குவது நம் கடமை: CM ஸ்டாலின்

சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணை இருப்பதில் தான் பெரும்பான்மையினரின் பலமும், குணமும் உள்ளதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். தனது X பதிவில், <<18667009>>ஜபல்பூர்-ராய்பூரில்<<>> சிறுபான்மையினரை வலதுசாரி கும்பல்கள் தாக்கியதாகவும், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவது நம் கடமை எனவும் CM பதிவிட்டுள்ளார். Xmas விழாவில் PM மோடி பங்கெடுக்கும்போதே, இவ்வாறு நடப்பது மக்களுக்கு தவறான செய்தியை சொல்லும் எனவும் கூறியுள்ளார்.
News December 25, 2025
ஹெர்பல் டீ குடிப்போருக்கு.. FSSAI விடுத்த வார்னிங்!

மூலிகை (அ) பிற தாவரங்கள் மூலம் உருவாக்கப்படும் பானங்களுக்கு ‘Herbal Tea’, ‘Flower Tea’ போன்றவற்றில் Tea வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என FSSAI அறிவித்துள்ளது. தேயிலையில் இருந்து தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் Tea எனப் பெயர் வைக்கக்கூடாது எனவும் வார்னிங் விடுக்கப்பட்டுள்ளது. காலை, மாலையில் டயட் என்ற பெயரில் ‘Herbal Tea’ குடிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
இந்தியாவின் முதல் அரசி: விஜய்

வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தனது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு விஜய் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளார். தனது X பதிவில் விஜய், வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வெற்றி கண்டவர் வேலுநாச்சியார் என்றும், அவர் இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணியவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.


