News October 18, 2025

ஜன் சுராஜுக்கும் NDA-வுக்கும் தான் போட்டியே: PK

image

நவ.6, 11-ல் பிஹாரில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அங்கு தேர்தல் பரப்புரை விறுவிறுப்பாகியுள்ளது. ஆனால், இன்னும் INDIA கூட்டணி, தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாதது குறித்து பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தான் முன்பே கூறியது போல் NDA-வுக்கும் ஜன் சுராஜுக்கும் இடையே தான் போட்டி, INDIA கூட்டணிக்கு 3-வது இடம் தான் என்று பதிலளித்துள்ளார்.

Similar News

News October 18, 2025

தீபாவளி.. மதுப்பிரியர்களுக்கு HAPPY NEWS

image

தீபாவளியையொட்டி மது தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போதுமான மதுபானங்களை கையிருப்பில் வைக்க வேண்டும் என டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகம் விற்பனையாகும் மது வகைகளின் இருப்பை கணிசமாக உயர்த்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு வழக்கத்தைவிட மது விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 18, 2025

தங்கம் முதலீடு அல்ல, காப்பீடு: ஸ்ரீதர் வேம்பு

image

தங்கம் வாங்குவது முதலீடு அல்ல, அது தான் ஒருவரின் Insurance என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையின் நிலையற்றத்தன்மையால், வேகமாக ஏறும் மதிப்புகள் திடீரென முழுவதுமாக சரிய வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார். 2008 நிதி நெருக்கடி போல மீண்டும் வரலாம் என்று எச்சரித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, நிதி அபாயத்தில் இருந்து காக்கும் காப்பீடு தங்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

News October 18, 2025

முன்னோர்கள்னா சும்மா இல்ல பாஸ்.. கொஞ்சம் இத பாருங்க

image

நமது பாரம்பரியமும், கலாசாரமும் அறிவியலுக்கு என்றுமே சவாலாகவோ (அ) திகைப்படையச் செய்யும்படியே இருக்கும். அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில்கள் 79° தீர்க்கரேகையில் ஒன்று போல் அமைந்துள்ளன. இந்த வாயைப் பிளக்கும் அதிசய கோயில்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த சிறப்புவாய்ந்த கோயில் எதுவென்று கமெண்ட்டில் சொல்லுங்கள்.

error: Content is protected !!