News April 14, 2024
உயிர்த்தெழ தயாரானார் சேனாதிபதி

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள படக்குழு, புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. சமரசம் இல்லாத சேனாதிபதி உயிர்த்தெழ தயாராகிவிட்டார். ஜூன் மாதம் திரையங்குகளில் காண தாயாராகுங்கள் எனக் குறிப்பிட்டு வெளியான அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Similar News
News January 9, 2026
மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக: ராகுல்

நாடு முழுவதும் ‘ஊழல்’ பாஜக கட்சி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம் எனும் விஷம் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் புள்ளி விவரங்களாக மட்டுமே இருப்பதாக கூறிய அவர், மோடிஜியின் ‘டபுள் இன்ஜின் ஆட்சி’ பில்லியனர்களுக்காக மட்டுமே இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 9, 2026
மக்கள் நாயகன் காலமானார்

நாட்டு விடுதலைக்காக போராடிய மக்கள் நாயகனின் இறுதி மூச்சு இன்று அடங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி மா.வன்னிக்காளை(92) உடல்நலக் குறைவால் காலமானார். விடுதலைக்கு பிறகும் பெண் குழந்தைகளின் கல்விக்கான சேவையில் ஈடுபட்டுவந்த அவர், அப்பணிக்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதினை 1991-ல் பெற்றார். மக்கள் பணிக்காக சிறந்த காந்தியவாதி உள்பட பல விருதுகளை வென்ற இந்த நாயகன் இப்போது நம்முடன் இல்லை. RIP
News January 9, 2026
பராசக்தியில் ஹிந்தி திணிப்பு வசனம் மாற்றம்

‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிரபல முழக்கமான, ‘இங்கு அண்ணாதுரை தான் ஆள்கிறான்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்பதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி திணிப்பு தொடர்பான வசனங்களும் மியூட் செய்யப்பட்டுள்ளன.


