News October 23, 2024
பட்டாசு விற்பனையை இன்று தொடங்கி வைக்கும் ஆட்சியர்

தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் திடலின் அருகே சரவணபவ கூட்டுறவு பண்டக சாலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (2310.2024) மாலை 6 மணி அளவில் பட்டாசு விற்பனையினை துவக்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மேயர், துணை மேயர், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
Similar News
News January 21, 2026
கடலூர்: ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் பலி

கேரளா மாநிலம் விளங்கமுரி பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(33). இவர் நேற்று சென்னை தாம்பரத்தில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.அப்போது பகல் 2 மணியளவில் விருத்தாசலம் அடுத்த கோ.பூவனூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் இருப்புபாதை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கோண்டுள்ளனர்.
News January 21, 2026
கடலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
கடலூர்: இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

கடலூர் மாவட்டம் திருமாந்துறை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ராமநத்தத்தில் தொழுதுரை சேர்ந்த பிரவீன்(26) என்பவரிடம், கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்த வழக்கில், ராமநத்தம் போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையில் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.


