News October 10, 2025

கூட்டணி களம் மாறியது.. தமிழகத்தில் புதிய திருப்பம்

image

EPS-ன் பரப்புரையில் நாளுக்குநாள் TVK கொடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூட்டணிக்கான ‘பிள்ளையார் சுழி’ என EPS கூறியதற்கு TVK தரப்பினர் மறுக்கவில்லை. அதேநேரம், TVK கொடியுடன் வருவோர் தன்னெழுச்சியாக வருவதாக கூறப்படுகிறது. காரணம், கரூர் துயர சம்பவத்தில் EPS, விஜய்க்கு ஆதரவாக நின்றதுதான் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். TVK, ADMK கூட்டணியில் இணைந்தால் TTV தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

Similar News

News October 10, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 அதிகரித்தது

image

தங்கம் விலைக்கு டஃப் கொடுக்கும் வகையில், வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இன்று மட்டும் 1 கிலோ வெள்ளி ₹7,000 அதிகரித்துள்ளது. தற்போது, 1 கிராம் வெள்ளி ₹177-க்கும், ஒரு கிலோ ₹1.77 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதத்தின் 10 நாள்களில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹23,000 உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 10, 2025

கொள்கையற்ற கூட்டம் உருவாகியுள்ளது: உதயநிதி

image

தமிழகத்தில் தற்போது கொள்கையற்ற கூட்டம் உருவாகியுள்ளதாக தவெகவை உதயநிதி மறைமுகமாக சாடியுள்ளார். இந்த கொள்கையற்ற கூட்டத்தை கொள்கைமயப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டியது நமது (திமுக) கடமை என்று தெரிவித்துள்ளார். பெரியாரின் வழியில் தமிழகத்தை கொள்கை கொண்ட மாநிலமாக எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கரூர் துயர வழக்கிலிருந்தே தவெகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் உதயநிதி.

News October 10, 2025

அக்.16-ல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

image

அக்.16 – 18-ம் தேதிக்குள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று IMD தெரிவித்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் இயல்பை விட அதிகமான மழை பொழியும் என்றும் கணித்துள்ளது. மேலும், தீபாவளி நாளில் மழை பெய்யுமா என்பதை 5 நாள்களுக்கு முன்பு தான் கூற முடியும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார். அக்.1 முதல் இன்று வரை வழக்கத்தை விட (17 செ.மீ) குறைந்த அளவே (5 செ.மீ) மழை பெய்துள்ளது.

error: Content is protected !!