News April 29, 2025
கடனாளியாக்கும் முதல்வர்: அரசு ஊழியர்கள் சங்கம்

சட்டப்பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்த 9 அறிவிப்புகள் கடன் சார்ந்த விஷயங்களாகவே இருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஊழியர்களுக்கு சலுகை கொடுப்பது போல் ஏமாற்றி, மீண்டும் அரசுக்கே திரும்ப பெறக்கூடிய வகையில் கடனாளியாக்க முயல்வதாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்றும் அச்சங்கம் சாடியுள்ளது.
Similar News
News October 23, 2025
வங்கிக் கணக்கு இருக்கிறதா… முக்கிய அறிவிப்பு

வங்கி வாடிக்கையாளர்களுக்கு நாமினிகளை (வாரிசுதாரர்கள்) நியமிப்பது தொடர்பான புதிய விதிமுறைகள் வரும் நவ.1 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, *ஒருவர் தனக்கு நான்கு நாமினிகள் வரை நியமிக்கலாம். *அந்த 4 பேரில் யார் முதன்மை நாமினி, யாருக்கு எவ்வளவு சதவீதம் பங்கு என்பதையும் நிர்ணயிக்கலாம் *டெபாசிட்ஸ், லாக்கர், லாக்கரில் வைக்கும் பொருள்கள் ஆகியவற்றுக்கும் இது பொருந்தும்.
News October 23, 2025
லோடு மேன் பேச்சை கேட்டு EPS கூறுகிறார்: உதயநிதி

EPS கூறியது போல் செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை என DCM உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்சையில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல் கொள்முதல் தொடர்பாக <<18072011>>EPS<<>> பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும், லோடு மேன் ஒருவர் கூறிய தகவலை வைத்து நாளொன்றுக்கு 800 மூட்டைகள் நெல் கொள்முதல் என கூறுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News October 23, 2025
நாளை காலை முதலே இதை நிறுத்துங்க!

ஒரு மாதத்திற்கு டீ குடிப்பதை நிறுத்தினால் உடலில் பல நன்மைகள் நடப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, டீ குடிப்பதை நிறுத்தினால், ஆழ்ந்த உறக்கம் கிடைக்குமாம். அதுமட்டுமல்ல, பதற்றம், Dehydration பிரச்னைகள் குறையும். செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்கள் குறையும், செரிமான பிரச்னை உள்ளிட்டவைகள் சரியாகுமாம். எனவே, நாளை காலையில் இருந்தே இதை ட்ரை பண்ணி பாருங்க மக்களே!