News March 18, 2024
சாம்பியன் பட்டம் வென்றார் கரோலின் மரின்

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டனில் ஸ்பெயினின் கரோலின் மரின் சாம்பியன் பட்டம் வென்றார். பர்மிங்காமில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்ட மரின், 26-24, 11-1 என்ற செட்களில் முன்னிலையில் இருந்த போது, காயத்தால் யமகுச்சி விலகினார். இதனால் மரின் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார். இது ஆல் இங்கிலாந்து ஓபனில் கரோலின் வெல்லும் 2ஆவது சாம்பியன் பட்டமாகும்.
Similar News
News October 15, 2025
BREAKING: வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கரூர் விவகாரத்தில் பேரவையில் அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கரூர் துயரம் பற்றிய விவாதத்தின்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். இதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க கோரி, CM இருக்கை அருகிலேயே தரையில் அமர்ந்து EPS உள்ளிட்ட அதிமுக MLA-க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அப்பாவுவை கண்டித்தும் அவர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
News October 15, 2025
உடற்கூராய்வு: இபிஎஸ் கேள்வி, அமைச்சர் பதில்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 39 பேரின் உடல்களுக்கு ஒரே இரவில் எப்படி உடற்கூராய்வு செய்தீர்கள் என்று சட்டப்பேரவையில் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அவ்வளவு அவசரமாக உடற்கூராய்வு செய்தது ஏன் என்றும் அவர் வினவினார். அதற்கு, 25 மருத்துவர்களை கொண்டு ஆட்சியர் அனுமதியுடன் தான் உடற்கூராய்வு செய்ததாக அமைச்சர் மா.சு., பதிலளித்துள்ளார். இதற்கான முழு வீடியோ ஆதாரம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
News October 15, 2025
எல்லாருக்கும் BP-யா? சபாநாயகர் அப்பாவு கிண்டல்!

சட்டப்பேரவைக்கு கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுக MLA-க்களை பார்த்து, அனைவருக்கும் ஒன்றாக BP அதிகமாகி விட்டதோ என்று நினைத்து விட்டதாக சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார். சிறையில் சிறைவாசிகள் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் உள்ளதாக அமைச்சர் ரகுபதியும் கூறிய நிலையில், சபாநாயகர் மற்றும் அமைச்சரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.