News April 13, 2025
நயினார் நாகேந்திரனுக்கு காத்திருக்கும் சவால்கள்

நயினார் நாகேந்திரனுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. 2026 தேர்தலில் பாஜகவுக்கு அதிக தொகுதிகளில் வெற்றியை தேடித் தர வேண்டிய பொறுப்பும், கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய கடமையும் அவருக்கு உள்ளது. மாநிலத் தலைவராக ஏற்கெனவே இருந்த பல தலைவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய அவசியமும் உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியை எதிர்கொள்ள வேண்டிய சவாலும் காத்திருக்கிறது.
Similar News
News January 16, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 16, தை 2 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 16, 2026
வேலை கிடைக்காததற்கு இது தான் காரணமா?

இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கவில்லை என TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
News January 16, 2026
தேமுதிக பிடிவாதத்தால் EPS அப்செட்

தேமுதிகவின் சமீபத்திய கடலூர் மாநாட்டில் கட்சி நிர்வாகிகளே எதிர்பாரத வகையில் பெரும் கூட்டத்தை பிரேமலதா கூட்டிவிட்டார். அதை காரணம் காட்டி, பாமகவை விட ஒரு தொகுதியாவது கூடுதலாக வேண்டும் என பிடிவாதமாக இருக்கிறாராம். அப்படி கொடுத்தால், வடமாவட்டங்களில் பாமகவை கூட்டணியில் சேர்த்ததற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என EPS கடும் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


