News February 27, 2025

மத்திய அரசின் வாதம் தவறானது: அன்புமணி

image

மும்மொழி கொள்கையினை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி தரமாட்டோம் என மத்திய அரசு கூறுவது தவறு என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கல்வி என்பது மாநில அரசின் உரிமை, அதில் மத்திய அரசு இடையூறு செய்யக்கூடாது என்பதே பாமகவின் நிலைபாடு என்றும் கூறியுள்ளார். 45 ஆண்டுக்கு முன் கல்வி மாநில பட்டியலில் இருந்ததாகவும், எமர்ஜென்சி காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News February 27, 2025

மகா கும்பமேளா நிறைவு: 68 கோடி பக்தர்கள் நீராடினர்

image

உ.பி பிரயாக்ராஜ் நகரில் 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. கடந்த மாதம் 13ஆம் தேதி பவுர்ணமி தினத்தன்று தொடங்கிய மகா கும்பமேளாவில், இதுவரை 68 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடினர். மகா கும்பமேளா இனி 2169ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

News February 27, 2025

ஈஷாவில் களைகட்டிய மகா சிவராத்திரி

image

மகா சிவராத்திரி விழாவையொட்டி கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை, நடிகர்கள் சந்தானம், நடிகை தமன்னா, விஜய் வர்மா, ஓம்பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

News February 27, 2025

ஓ.டி.டி தளத்தில் லக்கி பாஸ்கர் சாதனை

image

ஓ.டி.டி தளத்தில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படம் புதிய சாதனைய படைத்துள்ளது. ஓ.டி.டி.யில் வெளியாகி 13 வாரங்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற சாதனையை இப்படம் படைத்துள்ளது. நவ. 28ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இந்த படம் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

error: Content is protected !!