News August 22, 2025

பாக்., அணியுடன் மோதுவதை உறுதி செய்த மத்திய அரசு!

image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாக்., உடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதில்லை. இதனிடையே, ஆசிய கோப்பை தொடரில் ஒரே குரூப்பில் இந்தியா, பாக்., இடம்பெற்றது. இதனால் இரு அணிகளும் மோதுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ICC தொடர்களில் இந்தியா விளையாடும் என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாக்.,ல் நடைபெறும் போட்டிகளிலும், அவ்வணியுடன் இருதரப்பு தொடர்களிலும் விளையாடாது என்றும் விளக்கியுள்ளது.

Similar News

News March 27, 2026

பாலக்கோடு: யார் இந்த கே.பி.அன்பழகன்

image

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் (68), பாலக்கோடு தொகுதியில் 6-வது முறையாகப் போட்டியிடுகிறார். 1978 முதல் அதிமுகவில் உள்ள இவர், 2001 முதல் தொடர்ந்து 5 முறை இத்தொகுதியில் வென்றுள்ளார். செய்தி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது மீண்டும் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

News March 27, 2026

₹47,000 சம்பளம், 664 பணியிடங்கள்.. APPLY NOW

image

மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் 664 பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: மாதம் ₹47,330. கல்வித்தகுதி: 10th, +2, Diploma in Mining Engineering ➤தேர்வு முறை: Computer Based Test, Personal Interview ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 6. ➤விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். வேலை தேடுவோருக்கு இதை ஷேர் பண்ணுங்க.

News March 27, 2026

கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி வாக்குறுதிகள்

image

கடன் தள்ளுபடி அறிவிப்பை பிரதான கட்சிகள் அடுத்தடுத்து வாக்குறுதிகளாக வெளியிட்டு வருகின்றன. கல்விக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என EPS ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில், கல்விக்கடன், நெசவாளர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நேற்று ராமதாஸ் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் கடன் தள்ளுபடி இடம்பெறும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!