News August 12, 2024
சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் சி.வி.சண்முகம் முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனை எதிர்த்து சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய உத்தரவிட்டது.
Similar News
News March 7, 2026
நேபாளத்தில் புதிய ஆட்சி.. இந்தியாவுக்கு நன்மையா?

பாலேன் ஷா தலைமையில் நேபாளத்தில் ஆட்சி அமையவுள்ளது. இச்சூழலில், இந்தியாவுடன் நேபாளம் சுமூகமான உறவை கொண்டிருக்குமா என்பது விவாதமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை ஷா பேசியிருந்தாலும், அவர் சீனாவுடன் நெருக்கமான உறவில் இல்லாதது இந்தியாவுக்கு நன்மை என பார்க்கப்படுகிறது. அத்துடன், தேர்தல் அறிக்கையில் வெளிநாட்டு உறவுகளில் சுமுகமான போக்கை விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.
News March 7, 2026
OPS எண்ட்ரியால் திமுகவில் சலசலப்பா?

OPS வருகையால் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள் பலர் முகம் வாடுகின்றனராம். காரணம், அதிமுகவில் இருந்து வருகிறவர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தலைமை, ஏற்கெனவே இருக்கும் நிர்வாகிகளை ஒதுக்கிவிட்டு அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குகிறது என்கின்றனராம். அத்துடன் ஜெ.,வின் ஆதரவாளரான OPS தற்போது திமுக புகழ் பாடத்தொடங்கியிருப்பதால் அவருக்கு இருந்த சமூக ஆதரவும் குறைந்திருப்பதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
News March 7, 2026
நகைக்கடன் தள்ளுபடி .. வெளியான மகிழ்ச்சி செய்தி

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக பெண்களை கவரும் வகையில், மகளிர் தினத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று பெண்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார். நாளை திமுகவும், அதிமுகவும் பெண்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது


