News February 2, 2025
தோல்வியே பார்க்காத கேப்டன்… ஜாம்பவான்களை முந்திய SKY!

கேப்டனாக SKY ஆடிய 6 T20 தொடரில் 5வை வென்றுள்ளார். 2023ல் ஆஸி. (4-1), தென்னாப்பிரிக்கா (1-1), 2024ல் இலங்கை (3-0), வங்கதேசம் (3-0), தென்னாப்பிரிக்கா (3-1) என தொடர் வெற்றிகள் தான். இங்கி. தொடரையும் வென்று விட்டார். இதன் மூலம், இந்தியாவின் டி20 கேப்டன்களிலேயே அதிக வெற்றி சதவீதத்தை (80.95%) கொண்ட கேப்டனாக முத்திரை பதித்துள்ளார். அடுத்த இடத்தில் ரோஹித் (80.64%), கோலி (64%), தோனி (58.33) உள்ளனர்.
Similar News
News March 2, 2026
தவெக – காங்கிரஸ் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை?

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க காங்., முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராகுல் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், ஆதவ்வும் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுவதால் இதுகுறித்த யூகங்கள் வலுத்துள்ளன. மேலும், இதுபற்றி காங்கிரஸாரிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறதாம். அத்துடன் கூட்டணி பற்றிய முடிவை இன்று மாலைக்குள் சொல்லுமாறு காங்.,க்கு திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 2, 2026
விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. ஒருவர் உயிரிழப்பு

நடிகை தேவி பிரியா(44) கார் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளது. பெரம்பலூர் அருகே கார் பஞ்சராகி நின்ற நிலையில், டிரைவர் முத்துகணேஷ் டயரை மாற்றிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் இருந்து வேகமாக வந்த மற்றொரு வாகனம் மோதி, முத்துகணேஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். தேவி பிரியா காயமின்றி தப்பிய நிலையில், உதவியாளர் திவாகர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
News March 2, 2026
1 ரூபாய் செலவில்லாமல் ₹7 லட்சம் கிடைக்கும்

ஒரு ரூபாய் கூட பிரீமியம் செலுத்தாமல் EPFO-வில் ஊழியர்கள் ₹7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். பணியில் இருக்கும் ஊழியர் இறந்தால், அவரது குடும்பம் அல்லது நாமினி, ₹2.5 லட்சம் – ₹7 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெற முடியும். ஊழியரின் கடைசி 12 மாத சராசரி சம்பளத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை கணக்கிடப்படும். EPFO போர்ட்டலில் உள்ள “Death claim filing by beneficiary”-ல் இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE.


