News March 16, 2024
திண்டுக்கல் முதல்வரை சந்தித்த வேட்பாளர்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்கள் இன்று 16.02.2024- தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். உடன் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 5, 2025
திண்டுக்கல் மாணவர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு தேர்வு

அடுத்த மாதம் துபாயில் ரோல்பால் ஸ்கேட்டிங் உலகக் கோப்பைக்கான போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கம் மாணவர் தீபக் ராஜா மற்றும் மாணவி மதுமிதா ஆகியோர் சீனியர் பிரிவில் இந்திய அணிக்காக விளையாட தேர்வாகியுள்ளனர். இவர்களை மாஸ்டர் பிரேம் நாத் மற்றும் விளையாட்டு ஆய்வாளர்கள் வாழ்த்தினர்.
News November 5, 2025
திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.
News November 5, 2025
வத்தலகுண்டு வாலிபருக்கு கத்திகுத்து!

திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் உள்ள ஒர்க்ஷாப்பில் பாண்டியராஜன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சித்தரேவை சேர்ந்த சூரிய பிரகாஷ் என்பவர் குடிபோதையில் பைக் வேண்டும் என கேட்க பாண்டியராஜன் மறுத்க்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் பாண்டியராஜனை கத்தியால் வெட்டினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சூரிய பிரகாஷை இன்று கைது செய்தனர்.


