News November 29, 2024
அரசு ஆம்புலன்ஸில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

ம.பி.யின் மௌகஞ்ச் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி, அரசு ஆம்புலன்சில் சிறுமியை (16) இருவர் கடத்தியுள்ளனர். அவரை ஓடும் வண்டியிலேயே பாலியல் பலாத்காரம் செய்து சாலையில் விட்டுவிட்டு தப்பித்துள்ளனர். இது குறித்து சிறுமி புகார் அளிக்கவே இச்சம்பவம் வெளியே வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் வீரேந்திர சதுர்வேதி, அவரது நண்பர் ராஜேஷ் கேடவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Similar News
News April 25, 2025
காஞ்சி சங்கர மடத்தின் அடுத்த தலைவர் இவரா?

புகழ்பெற்ற காஞ்சி சங்கர மடத்தின் 71-வது மடாதிபதியாக ஸ்ரீ கணேச ஷர்மா டிராவிட் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆந்திராவைச் சேர்ந்த இவருக்கு, வரும் 30-ம் தேதி தற்போதைய மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி தீக்ஷை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிக் வேதத்தில் புலமை பெற்றவரான ஸ்ரீ கணேச ஷர்மா, அனைத்து வேதங்களையும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
News April 25, 2025
LoC என்றால் என்ன?

Line of Control என்பது J&K, லடாக்கில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவங்களை பிரிக்கும் பகுதியாகும். 1972 சிம்லா ஒப்பந்தத்திற்கு பிறகு LoC நடைமுறைக்கு வந்தது. 1947 போருக்கு பிறகு, 1949-ல் கொண்டுவரப்பட்ட இது Cease Fire Line (CFL) என அழைக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தை மீறி 1965, 1971-ல் பாக். போரில் ஈடுபட்டதால், 1972-ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகி, LoC-ஐ கொண்டு வரப்பட்டது.
News April 25, 2025
தமிழ்நாட்டில் காவல் ராஜ்ஜியம் நடக்கிறதா?… கவர்னர்

துணை வேந்தர்களை மாநாட்டில் பங்கேற்கவிடாமல் தடுத்த விதம் எமர்ஜென்சியை நினைவூட்டுவதாக கவர்னர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார். காவல்துறையை பயன்படுத்தி VC-க்களை CM தடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். ஊட்டி சென்ற VC-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? VC-க்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.