News February 15, 2025

வரதட்சனை கேட்டு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரம்

image

உ.பி.யில் கூடுதலாக வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய கொடூரம் நடந்துள்ளது. ஏற்கனவே ₹ 15 லட்சம் பணம், கார் கொடுத்த நிலையில், கூடுதலாக ₹10 லட்சம், பெரிய கார் கேட்டு டார்ச்சர் செய்துள்ளனர். அப்பெண்ணுக்கு தற்போது எய்ட்ஸ் உறுதியாகியுள்ளது. கணவனின் குடும்பத்தார் மீது FIR பதிவு செய்ய போலீசார் மறுத்த நிலையில், பெண்ணின் பெற்றோர் கோர்ட்டை நாடியதும், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News January 2, 2026

UPI-ல் சாதனை.. ₹300 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை

image

UPI பரிவர்த்தனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில், 21.6 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. அதன் மதிப்பு ₹27.97 லட்சம் கோடி ஆகும். UPI வரலாற்றிலேயே இது அதிகபட்சமாகும். சராசரியாக ஒவ்வொரு நாளும் 698 மில்லியன் டிஜிட்டல் பேட்மெண்ட்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 222.8 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்ததாகவும், அதன் மதிப்பு ₹299.7 லட்சம் கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

News January 2, 2026

ஜனவரி 2: வரலாற்றில் இன்று

image

*1757–கொல்கத்தாவை பிரிட்டிஷ் கைப்பற்றியது
*1960-கிரிக்கெட்டர் ராமன் லம்பா பிறந்தநாள்
*2006–திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றது
*2012-பரதநாட்டிய கலைஞர் கே.ஜே.சரசா நினைவு நாள்

News January 2, 2026

பிக்பாஸ் ஃபைனல்.. TTF வின்னர் இவரா?

image

பிக்பாஸ் தமிழ் முடிவதற்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், Ticket to Finale போட்டிகள் சூடுபிடித்துள்ளன. ஏழு டாஸ்க்கின் முடிவில் சபரி, சாண்ட்ரா, அரோரா முன்னிலை வகித்தனர். இறுதிக்கட்ட கார் டாஸ்க்கில் ஆரோரா, பார்வதி, கம்ரூதின் கடும் இடையே போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஆரோரா 2 புள்ளிகள் முன்னிலையுடன் இருப்பதால், அவர் TTF ஜெயித்து ஃபைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!