News April 15, 2025
காதலியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கொடூரம்

அடுத்தடுத்த அரிவாள் வெட்டு சம்பவங்கள் தென் மாவட்டங்களை அதிரச் செய்துள்ளன. பாளையங்கோட்டையில் பள்ளிக்குள் எட்டாம் வகுப்பு மாணவனை சக மாணவன் அரிவாளால் வெட்டிய பரபரப்பு அடங்குவதற்குள், அதேபோன்ற சம்பவம் தென்காசியில் நடந்துள்ளது. காதலியை வீடு தேடிச் சென்று அரிவாளால் வெட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பல ஆண்டு காதலித்த பெண், திடீரென பேசாமல் ஒதுங்கியதால் அவர் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார்.
Similar News
News February 22, 2026
வரலாற்றில் இன்று

*1898 – தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உரிமைக்கான போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம். *1936 – தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் & பேச்சாளர் சாலமன் பாப்பையா பிறந்த தினம். *1944 – இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க வான்படையினர் தவறுதலாக 4 டச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800-க்கும் அதிகமானோர் இறந்தனர். *1944 – காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்த நாள். *இன்று உலக சிந்தனை தினம்.
News February 22, 2026
நார்ச்சத்து உணவுகளின் நன்மைகள்

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. நார்சத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன. *செரிமானத்துக்கு உதவி செய்கின்றன *மலச்சிக்கலை தடுக்கின்றன *உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. *இதய நோய் அபாயத்தை குறைக்கிறது *ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது *நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து, பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
News February 22, 2026
ஆசியர்களுக்கு மனநல பயிற்சி: சிபிஎஸ்இ உத்தரவு

ஆசிரியர்ககளுக்கு ஆண்டுக்கு 2 முறை மனநல நிபுணர்களால் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாணவர்களின் மனஅழுத்த அறிகுறிகளை கண்டறிதல், உளவியல் முதலுதவி, பாகுபாடின்றி நடந்து கொள்ளுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பயிற்சிகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


