News October 3, 2025
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை: மஸ்க் ரியாக்ஷன்

‘ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆளவில்லை’ என்ற X பதிவிற்கு, சிந்திப்பது போன்ற எமோஜியை பதிவிட்டு ரீட்வீட் செய்துள்ளார் எலான் மஸ்க். தற்போது இது வைரலாகியுள்ளது. அந்த பதிவில், ‘இந்தியர்கள் இங்கிலாந்தில் கால் பதித்து ஆங்கிலேயர்களாக மாறினால், பின்னர் இந்தியாவில் கால் பதித்த ஆங்கிலேயர்கள் இந்தியர்களாக மாறினர். எனவே பிரிட்டிஷார் இந்தியாவை ஆளவில்லை’ என உள்ளது. இந்த பதிவில், காலனித்துவமே இல்லை என கூறப்படுகிறது.
Similar News
News October 3, 2025
BREAKING: நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையிலுள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு மர்மநபர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, போலீசார் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. மிரட்டலை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News October 3, 2025
மாதவிடாய் வலியா? இந்த தேநீர் போதும்!

மாதவிடாய் தள்ளிப்போகுதா (அ) அதிக வலி ஏற்படுகிறதா? கொத்தமல்லி தேநீர் உதவும் என சித்தா டாக்டர்கள் கூறுகின்றனர். ➤1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகளை 1 கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் ➤காலையில் தண்ணீர் பாதியாக குறையும் வரை கொதிக்க வைக்கவும் ➤கொத்தமல்லி விதைகளை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30 நாள்களுக்கு இதை குடியுங்கள். அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.
News October 3, 2025
அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் அடுத்த கட்சி

மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காத விரக்தியில் OPS-ம், எடப்பாடி தலைமையை ஏற்க முடியாது என டிடிவியும் NDA கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். இந்நிலையில், மேலும் ஒரு கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, மதுரை விமான நிலைய பெயர் சர்ச்சையால், ஜான் பாண்டியனுக்கும் (தமமுக) அதிமுகவும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அவர் வெளியேறும் முடிவில் இருக்கிறாராம்.