News April 23, 2025
அப்பாவிகள் சிந்திய ரத்தம்… சூழும் போர் மேகங்கள்

தீவிரவாதிகளின் கொடூரத்திற்கு அப்பாவி சுற்றுலா பயணிகள் ரத்தம் சிந்தியுள்ளனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா உள்ளது. தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்க உறுதி கொண்டுள்ள இந்தியா மீண்டும் எல்லை தாண்ட தயங்காது. PM மோடி, அமித் ஷா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
Similar News
News September 16, 2025
யுவராஜ், உத்தப்பாவுக்கு ED சம்மன்!

சட்ட விரோத சூதாட்ட விளம்பர வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் & ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. அதில், உத்தப்பா வரும் 22-ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23-ம் தேதியும் நேரில் ஆஜராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் வீரர்கள் சுரேஷ் ரெய்னா & ஷிகர் தவான் உள்பட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி, ஊர்வசி ஆகியோரும் விசாரிக்கப்பட்டிருந்தனர்.
News September 16, 2025
ஆண்களே! விந்தணு அதிகரிக்க இந்த பழங்களை சாப்பிடுங்க

இந்தியாவில் விந்தணு குறைப்பாட்டால் சுமார் 1.3 கோடி ஆண்கள் தவிப்பதாக தரவுகள் சொல்கிறது. இந்த பிரச்னை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வைட்டமின் சி, துத்தநாகம், ஆண்டி ஆக்ஸிடன்ட்டுகள், இரும்பு சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவது அவசியம். அது என்னென்ன பழங்கள் என்பதை தெரிந்துக்கொள்ள போட்டோக்களை SWIPE செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE செய்யுங்கள்.
News September 16, 2025
EPS-க்கு பிரமாண்ட கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை

EPS-ன் சுற்றுப்பயணத்தில் எதிர்பார்த்ததை விட பிரமாண்ட கூட்டம் கூடுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சுற்றுப்பயணத்தில் EPS பாஜகவை பாராட்டி பேசுவதாக குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழகம் முழுவதும் NDA தலைவர்கள் கூட்டுப் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். டெங்கு பாதிப்பால் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், பிற்பகலில் அவர் கூட்டத்திற்கு வருகை தந்தார்.