News March 25, 2024

தில்லுமுல்லு நடவடிக்கையில் பாஜக ஈடுபடும்

image

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை நம்பித்தான் நாடு முழுவதும் 400 இடங்களில் வெற்றி பெறுவோமென பாஜக பரப்புரை செய்துவருவதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியைப் பிடிக்க பாஜக தில்லுமுல்லு நடவடிக்கையில் ஈடுபடும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எதிர்த்து I.N.D.I.A கூட்டணியில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் போனது கவலை அளிக்கிறது” என்றார்.

Similar News

News April 29, 2025

இலவச பட்டா விதிகளில் திருத்தம்!

image

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் நிலம் வழங்கப்படும். இதில் 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் இல்லை. மீதமுள்ள 1 சென்ட் நிலத்திற்கு அதன் மதிப்பில் 25% தொகையைச் செலுத்த வேண்டும்.

News April 29, 2025

மூடப்பட்ட ரிசார்ட்டுகள்.. சரிவை சந்திக்கும் காஷ்மீர் சுற்றுலா…

image

தாக்குதலை தொடந்து ஜம்மு-காஷ்மீரில் ரிசார்ட்டுகள், முக்கிய சுற்றுலாத் <<16251353>>தலங்கள் <<>>மூடப்பட்டதால் வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி காஷ்மீர் செல்லத் தயாராகிய பலர் ரிசார்ட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் சுற்றுலாவை நம்பி இருக்கும் காஷ்மீர் மக்களுக்கு எமனாக அமைந்தது தீவிரவாத தாக்குதல். இதில் இருந்து மீண்டு வருவது எளிதான காரியம் அல்ல.

News April 29, 2025

மீண்டும் PM பதவியை நோக்கி நகரும் மார்க் கார்னி

image

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் அதை நோக்கி PM மார்க் கார்னியின் லிபரல் கட்சி(167) நெருங்கியுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சி 147 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தற்போதைக்கு மீண்டும் கார்னி பிரதமராகும் சூழல் பிரகாசமாக உள்ளது.

error: Content is protected !!