News April 15, 2025
ஐநாவில் சட்டமேதையின் பிறந்தநாள் கொண்டாட்டம்

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நேற்று அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஐநாவிற்கான இந்தியாவின் நிரந்தர தூதரகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இதில் பேசிய மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுவதாக தெரிவித்தார். அதேபோல், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஏப்ரல் 14ஆம் தேதியை அம்பேத்கர் தினமாக அறிவித்தார்.
Similar News
News December 5, 2025
பாஜகவுடன் கூட்டணியா? விஜய் அறிவித்தார்

கரூர் சம்பவத்திலிருந்தே, NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க BJP விரும்புவதாக தகவல்கள் கசிந்தவாறு உள்ளன. இதற்கேற்றார் போலவே, தொட்டும் தொடாமல் BJP-யை விஜய் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், BJP உடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய்யிடம் கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக நாஞ்சில் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு (தமிழகம்) அதிகாரத்தில் உள்ள கட்சியை விஜய் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார்.
News December 5, 2025
அனில் அம்பானியின் ₹10,000 கோடி முடக்கம்

வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ₹1,120 கோடி சொத்துக்களை ED இன்று முடக்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் ₹8,997 கோடியை முடக்கிய நிலையில், இன்றுடன் சேர்த்து ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து <<17314173>>அனில் அம்பானி<<>> மீது பிடியை இறுக்கி வரும் ED, நிதிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
News December 5, 2025
விண்வெளி to அணு உலை வரை: இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்

இந்தியா – ரஷ்யா இடையே பல துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2030-க்குள் இரு தரப்பு வர்த்தகத்தை $100 பில்லியனாக (₹8.99 லட்சம் கோடி) உயர்த்துவது, விண்வெளி, பாதுகாப்பு, டெக்னாலஜி துறைகளில் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் அணு உலைகளை மேம்படுத்துவது, விசா நடைமுறைகளை எளிதாக்குவது, தீவிரவாதத்திற்கு எதிராக இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


