News April 9, 2025
மனதை கொள்ளையடிக்கும் பிகில் பட நடிகை!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை அமிர்தா ஐயர். அதனை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட் படத்தில் நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார். திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அமிர்தா, லேட்டஸ்ட் போட்டோஷூட் மூலம் இளசுகளின் மனதை திருடி வருகிறார்.
Similar News
News April 17, 2025
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

தலைமைச் செயலகத்தில் CM ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
News April 17, 2025
நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறை

கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நாளை முதல் 3 நாள்கள் தொடர் விடுமுறையாகும். நாளை வெள்ளிக்கிழமை (ஏப்.18) ‘GOOD FRIDAY’-வை முன்னிட்டு அரசு விடுமுறை ஆகும். அடுத்த நாள் சனிக்கிழமை. அதற்கடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகவே, அடுத்தடுத்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. அண்மையில்தான் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து மீண்டும் 3 நாள்கள் விடுமுறை கிடைக்கிறது.
News April 17, 2025
டிரெண்டாகும் டோலோ 650.. இது மாத்திரையா? சாக்லெட்டா?

X தளத்தில் தற்போது டோலோ 650 மாத்திரைதான் டிரெண்டிங் டாபிக். அமெரிக்காவில் பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த டாக்டர் பால் என அழைக்கப்படும் பழனியப்பன் மாணிக்கத்தின் பதிவுதான் இதற்கு காரணம். இந்தியர்கள் கேட்பரி ஜெம்ஸ் சாக்லெட்டை போன்று டோலோ 650 மாத்திரைகளைப் பயன்படுத்துவதாக அவர் பதிவிட்டுள்ளார். பலரும் அதை ஒப்புக்கொண்டு கமெண்ட் செய்து வருகிறனர். நீங்க எப்படி?