News March 23, 2025
ஆரம்பமே அமர்க்களம்… வெற்றியுடன் தொடங்கிய SRH

RR அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் SRH அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த SRH, 286 என்ற இமாலய ரன்களை குவித்தது. இஷான் கிஷான்(106*), ஹெட்(68) உள்ளிட்டோர் பேட்டிங்கில் அசத்தி இருந்தனர். இதனை அடுத்து, களமிறங்கிய RR அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. சஞ்சு சாம்சன், துருவ் ஜுரல் உள்ளிட்டோர் அரைசதம் அடித்தனர். எனினும் அந்த அணி 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Similar News
News July 11, 2025
லோகேஷ் மீது கோபம்: சஞ்சய் தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்திருந்தார். இந்நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக உள்ளதாக சஞ்சய் தத் தெரிவித்துள்ளார். ‘கேடி: தி டெவில்’ பட விழாவில் ஜாலியாக பேசிய அவர் லியோ படத்தில் தனக்கு பெரிய கதாபாத்திரம் கொடுக்கவில்லை எனவும் தன் திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
News July 11, 2025
மும்பை ரயில் குண்டுவெடிப்பு 19-ம் ஆண்டு நினைவு தினம்

மும்பை புறநகர் ரயில்களில் 2006 ஜூலை 11-ம் தேதி மாலை நேரத்தில் தீவிரவாதிகள் 7 தொடர் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினர். இதில் 180-க்கும் மேற்பட்ட அப்பாவி பயணிகள் பலியானதுடன், 800 பேர் பலத்த காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தின் 19-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி குண்டுவெடிப்புகளில் பலியானோருக்கு ரயில்வே சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
News July 11, 2025
6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம்!

ஆப்கனில் கொடுத்த கடனை கட்ட முடியாத தந்தை ஒருவர், பொம்மையுடன் விளையாட வேண்டிய தனது 6 வயது குழந்தைக்கு 45 வயது நபருடன் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை நிறுத்தாமல், ‘9 வயசு வரை குழந்தையை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகாதீங்க’ என தலிபான் அரசின் தீர்ப்பளித்திருப்பது மேலும் அதிரவைக்கிறது. கண் துடைப்பாக, குழந்தையின் தந்தை & திருமணம் செய்தவரை கைது செய்துள்ளனர். நீங்க என்ன சொல்றீங்க?