News March 21, 2024
சமனில் முடிந்த ஐபிஎல் சாம்பியன் போர்

தோனி- ரோஹித் ஷர்மா இடையேயான சாம்பியன் போர் சமனில் முடிந்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில், ரோஹித் (MI), தோனி (CSK) தலைமையிலான அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 6ஆவது முறை யார் கோப்பையை வெல்ல போவது? என ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், தற்போது இருவருமே கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால், போர் சமனில் முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 23, 2026
Fast Food உணவு பிரியரா நீங்க.. கொஞ்சம் கவனியுங்க!

உ.பி.,யின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த இல்மா குரேஷி(19), பயங்கரமாக தலைவலிக்கிறது என ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். MRI ஸ்கேன் எடுத்த போது, அவருக்கு 8 மூளைக் கட்டிகள் இருப்பது தெரியவர, அறுவை சிகிச்சை செய்தும் அவர் மரணமடைந்துள்ளார். இல்மா சாப்பிட்ட துரித உணவின் காரணமாக ஒட்டுண்ணி பாதிப்பு ஏற்பட்டு, அவருக்கு மூளைக்கட்டி வந்திருக்கலாம் என டாக்டர்கள் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. எச்சரிக்கையாக இருங்க மக்களே!
News January 23, 2026
மார்ச்சில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகிறதா?

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை பிப்ரவரி 2-வது வாரத்திற்குள் முடிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விருப்ப மனுக்களை பெற்றபிறகு, மார்ச் 8-ல் திருச்சியில் நடைபெறவுள்ள திமுக மாநில மாநாட்டில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வாக்குறுதிகள், விருப்ப மனு என விறுவிறுப்பில் உள்ள அதிமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிதான் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.
News January 23, 2026
இதெல்லாம் பண்றீங்களா? கிட்னி ஸ்டோன் வரும்!

உட்கார்ந்தே இருப்பது, தண்ணீர் அருந்துவதையே மறப்பது, நைட் ஷிஃப்டில் பணிபுரிவதால் கிட்னி ஸ்டோன் உருவாகும் ஆபத்து பகல்நேரம் பணிபுரிபவர்களை விட 15% அதிகமாகும் என ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். நைட் ஷிஃப்ட் பார்ப்பவர்களுக்கு இத SHARE பண்ணுங்க.


