News March 29, 2025
இ(பி)றந்த குழந்தைக்கு வந்தது உயிர்…அதிசயமா? அலட்சியமா?

அரசு சுகாதார மையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட பச்சிளம் குழந்தை, தனியார் ஹாஸ்பிடலில் உயிர்பிழைத்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகதூர் பைதா – ஜோதி குமாரி தம்பதிக்கு பிறந்த குழந்தை அசைவற்று இருந்ததால் அது இறந்துவிட்டதாக அரசு டாக்டர் கூறியுள்ளார். பின்னர், தனியார் ஹாஸ்பிடலில் ஆக்சிஜன் செலுத்தியபோது குழந்தை அழத் தொடங்கி இருக்கிறது. இதனால், பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 31, 2025
நாளை முதல் இந்த UPI கணக்குகள் செயல்படாது

நீங்கள் உங்களது பழைய செல்போன் எண்ணில் GPay/PhonePe உள்ளிட்ட UPI செயலிகளை பயன்படுத்தி வந்தால், அவை நாளையோடு செயல்படாமல் போகலாம். UPI கொண்டு வந்திருக்கும் புதிய விதிமுறைகள் நாளை முதல் அமலாகவுள்ளன. அதன்படி, செயல்படாமல் இருக்கும் செல்போன் எண்கள் UPI அப்ளிகேஷனுடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த கணக்குகள் உடனடியாக செயலிழப்பு செய்யப்படும்.
News March 31, 2025
Health Tips: தூக்கத்தில் விந்து வெளியேறுகிறதா?

பல இளைஞர்களுக்கு வெளியே சொல்ல முடியாத பிரச்னைகளில் தூக்கத்தில் விந்து வெளியேறுதலும் ஒன்றாக இருக்கிறது. எலுமிச்சை ஜூஸ், கோதுமை உணவுகள், மஞ்சள் இவற்றையெல்லாம் ஆண்கள் அளவாக எடுத்துக் கொண்டால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை பின்பற்றும்போது விந்தணுக்களின் அளவு, தரம் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
News March 31, 2025
ரம்ஜான் பிரியாணி சாப்ட்டீங்களா?

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம், இஸ்லாமிய தோழர்கள் தங்களது வீடுகளில் கறி பிரியாணி சமைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து வாழும் நமது நாட்டில், அந்த பிரியாணியை இந்துக்கள்தான் விரும்பி சாப்பிடுகின்றனர். உங்கள் பாய் நண்பர் உங்களுக்கு பிரியாணி கொடுத்தாரா? உரிமையா கேட்டு வாங்குங்க.