News April 17, 2024

கடவுள் ராமர் பூமியில் அவதரித்த புண்ணிய நாள்!

image

விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகக் கருதப்படும் ராமரின் பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் ராவ நவமியாக கொண்டாடப்படுகிறது. திரேதா யுகத்தில் சைத்ர சுக்ல நவமி அன்று ராமர் பிறந்தார். ராமரின் முன்னோர்கள் சூரியக்குல வழித்தோன்றல்கள் என்பதால் சூரியனை வழிபடுவதில் இருந்து ராம நவமி கொண்டாட்டம் தொடங்குகிறது. ராவ நவமியை ஒட்டி, அயோத்தியில் உள்ள பால ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஏற்றப்படவுள்ளது.

Similar News

News January 15, 2026

பொங்கல் முடிந்து ஊருக்கு திரும்புவோருக்கு அதிர்ச்சி!

image

குறைவான முன்பதிவு காரணமாக 5 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. அதன்படி, வரும் 19-ம் தேதி மாலை 3.30 மணிக்கு தாம்பரம்- கன்னியாகுமரி, 19-ம் தேதி இரவு 11.25 மணிக்கு சென்னை சென்ட்ரல்- கோவை, 21-ம் தேதி பகல் 12.30 மணிக்கு தாம்பரம் – நாகர்கோவில், 21-ம் தேதி நள்ளிரவு 12.35 மணிக்கு கோவை போத்தனூர் – சென்ட்ரல், 21-ம் தேதி பகல் 1.50 மணிக்கு சென்ட்ரல் – போத்தனூர் ஆகிய ரயில்கள் ரத்தாகியுள்ளன.

News January 15, 2026

ICC விருதை தட்டித்தூக்கிய வீரர்கள்!

image

டிசம்பர் மாதத்திற்கான ICC-யின் சிறந்த வீரர் விருதை ஆஸி.,யின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் வென்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவர் 31 விக்கெட்டுகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று சிறந்த வீராங்கனைக்கான விருதை தென்னாப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் லாரா வோல்வார்ட் கைப்பற்றியுள்ளார். கடந்த மாதம் 3 சதங்கள் உட்பட 392 ரன்கள் குவித்து அவர் கவனம் ஈர்த்திருந்தார்.

News January 15, 2026

சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு திமுகவினரே காரணம்: TTV

image

TN-ல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு திமுகவினரின் செயல்பாடுகளே காரணம் என TTV விமர்சித்துள்ளார். தனது X-ல் அவர், கள்ளத்துப்பாக்கி விவகாரத்தில் கடந்தாண்டு அரக்கோணத்திலும், தற்போது நெல்லையிலும் திமுக நிர்வாகிகள் கைதானதை சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் திமுகவினருக்கு தொடர்பிருப்பதாக சாடியுள்ளார். இப்பிரச்னையில் CM ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!