News January 24, 2025
வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: அரசு விளக்கம்

பஞ்சாப்பில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீராங்கனைகள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என TN அரசு தெரிவித்துள்ளது. பயிற்சியாளர் கைது செய்யப்படவில்லை, விசாரணைக்கு பிறகு அனுப்பப்படவுள்ளார், அவர்களை டெல்லிக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாப்பில் வீராங்கனைகள் தாக்கப்படும் வீடியோ வெளியானது. போட்டி நடுவர் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதில் பிரச்னையானதாக கூறப்படுகிறது.
Similar News
News January 3, 2026
புத்தரின் சின்னங்கள், இந்தியாவின் ஆன்மா: PM மோடி

1898-ல் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் கண்காட்சியை PM மோடி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அவர், புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர் என்றும் கூறினார். புத்தரின் புனித சின்னங்கள் வெறும் தொல்பொருள் கலைப்பொருள்கள் அல்ல; இந்திய பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் புனிதம் மீண்டும் தாய் திருநாட்டிற்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
News January 3, 2026
வங்கதேச வீரரை விடுவித்த KKR

BCCI அறிவுறுத்தியதன் அடிப்படையில், வங்கதேச வீரர் <<18750067>>முஸ்தஃபிசுர் ரஹ்மானை<<>> KKR அணி விடுவித்துள்ளது. மாற்று வீரரை எடுத்துக் கொள்ளவும் அந்த அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரஹ்மானை KKR ஏலத்தில் எடுத்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அவரை விடுவிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.
News January 3, 2026
ஆயிரம் அமித்ஷா வந்தாலும் மாற்றம் நடக்காது: சீமான்

TN-ஐ யார் அதிகம் நாசம் செய்வது என்பதில் தான் திமுக, அதிமுக இடையே போட்டி நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். திருச்சியில் பேட்டியளித்த அவர், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் TN-ல் எந்த மாற்றமும் நடக்காது என சவால் விடுத்தார். மேலும், திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என திருமாவளவன் பேசுகிறார்; ஆனால், திராவிடம் தமிழ் தேசியத்திற்கு எதிரானது என கற்பித்தவரே அவர் தான் என்றும் கூறினார். உங்கள் கருத்து?


