News October 5, 2024
கைதானவர் எங்கள் நிர்வாகி அல்ல: தவெக மறுப்பு

கரூரில் அரசுப் பள்ளி ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை திருடி, அதன் மூலம் லோனில் கார் வாங்கிய ராஜா என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் தவெக நிர்வாகி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தவெக கரூர் மாவட்ட தலைவர் மதியழகன், ராஜாவுக்கும், கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவருக்கு தவெகவில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 13, 2025
பாஜகவில் தொடங்கி திமுக வரை… மைத்ரேயனின் பயணம்

<<17389413>>திமுகவில் இணைந்துள்ள மைத்ரேயன்<<>> 1999-ம் ஆண்டு பாஜகவில் இருந்து அதிமுகவில் சேர்ந்தார். 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மைலாப்பூரில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் 2002, 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வானார். சிறிது காலம் OPS-வுடன் பயணித்த மைத்ரேயன் பிறகு பாஜகவில் இணைந்தார். தொடந்து EPS முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் நுழைந்தார்.
News August 13, 2025
திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்

அதிமுக முன்னாள் MP மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அந்த வரிசையில் தற்போது மைத்ரேயனும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
News August 13, 2025
சினிமாவில் 50 ஆண்டு நிறைவு! ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு EPS வாழ்த்து தெரிவித்துள்ளார். பொன்விழா ஆண்டில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள ‘கூலி’ படம் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் X தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் ரஜினிக்கு வாழ்த்து கூறியிருந்தார். ரஜினிக்கு திரைத்துறை பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.