News October 27, 2024

தவெக எதிரிகள் இவர்கள்தான்: விஜய்

image

பிளவுவாத சக்திகள், கரப்ஷன் கபடதாரிகள் தான் தவெகவின் எதிரிகள் என விஜய் கூறியுள்ளார். தமிழகத்தில் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசிய அவர், மக்களுக்காக களத்தில் நிற்பதே மகத்தான அரசியல் என்றார். மேலும், அரசியலில் தான் மாற்று சக்தியாக வரவில்லை; முதன்மை சக்தியாக வந்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். 2026 தேர்தலில் TVKக்கு ஓட்டு போடுவீர்களா? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News January 14, 2026

சிவகங்கை ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை

image

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல் கண்டறியப்பட்டால் அபராதம், பேருந்து பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 14, 2026

பொங்கல் பரிசு விபரீதம்.. தற்கொலை

image

பொங்கல் பரிசு ₹3,000 வாங்கிய தூத்துக்குடியை சேர்ந்த பாலமுருகன், மொத்த பணத்தையும் மது அருந்த செலவு செய்துள்ளார். பரிசு பொருள்களை மட்டும் வீட்டில் கொடுத்தபோது, செலவிற்காக மனைவி ₹1,000 கேட்க தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் மனைவியை கரும்பால் அடித்ததால், மனமுடைந்த போன பாலமுருகன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். ஏற்கெனவே <<18843663>>கோவையில் <<>> பொங்கல் பரிசு வாங்க சென்ற மூதாட்டி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 14, 2026

BREAKING: ₹2,500 உயர்த்தியது தமிழக அரசு

image

‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி 20 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களுடன், அமைச்சர் அன்பில் மகேஸ், இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் மேலும் ₹2,500 உயர்த்தப்படுவதாக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் ₹12,500-ல் இருந்து ₹15,000 ஆக உயர்த்தப்படுகிறது.

error: Content is protected !!