News March 19, 2024
தொன்மையான மொழி தமிழ் மொழி

உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி என பிரதமர் மோடி கூறியுள்ளார். சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழ் மொழி என்று பிறந்தது என யாருக்கும் தெரியாத அளவுக்கு, காலத்திற்கும் முந்தைய மூத்த மொழி தமிழ் மொழி என புகழாரம் சூட்டினார். மேலும், எனது நாட்டின் தமிழ் மொழி உலகிலுள்ள பிற மொழிகளை விடவும் தொன்மையானது என நெஞ்சை உயர்த்திக் கூறுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
சமையலுக்கு எந்த எண்ணெய் பெஸ்ட் சாய்ஸ்?

▶மரச்செக்கு தேங்காய் எண்ணெய்யில் சமைக்கப்படும் உணவு விரைவாக கெட்டுப்போகாது. இதில் நல்ல கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ▶வேர்க்கடலை எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலுக்கு நன்மை செய்யும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. ▶அவகேடோ எண்ணெய்யில் வறுத்த உணவுகள் சுவையாக இருக்கும். ▶பாமாயிலில் வைட்டமின் ஏ, நல்ல கொழுப்புகள் இருந்தாலும் இதை அதிகமாக பயன்படுத்தினால் கெட்ட கொழுப்பு அதிகமாகிவிடும்.
News October 21, 2025
வரலாற்றில் இன்று

*1895 – ஜப்பானிய படைகளின் முற்றுகையால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
*1937 – நடிகர் தேங்காய் சீனிவாசன் பிறந்ததினம்.
*1943 – சுபாஷ் சந்திர போஸ் நாடு கடந்த இந்திய அரசை அறிவித்தார்.
*1945 – பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
*1987 -யாழ்ப்பாண ஹாஸ்பிடல் படுகொலையில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
News October 21, 2025
இது இருந்த பாம்பு வீட்டை அண்டாது!

மழைக்காலம் வந்தால் வீடுகளில் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் வரவு அதிகரிக்கும். இதை தடுக்க உங்கள் வீட்டில் காட்டு துளசி செடி இருந்தால் போதும். துளசி போலவே காட்சி அளிக்கும் இந்த செடியில் இருந்து வரும் நறுமணம் பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தடுக்கும். காட்டு துளசியின் இலை, வேரை யாராவது எடுத்துச் சென்றால், பாம்பு அவர்கள் முன் வந்தால் கூட, நெருங்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.