News March 21, 2024
நேற்று கூட்டணி இறுதி.. இன்று அதிமுகவுக்கு செக்..

பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணியை இறுதி செய்து நேற்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை என்பது உறுதியானது. இந்நிலையில், காலை முதல் 4 மணி நேரமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. 2022ல் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இச்சோதனை நடக்கிறது.
Similar News
News December 31, 2025
திருத்தப்பட்ட ITR தாக்கல்.. இன்றே கடைசி

திருத்தப்பட்ட ITR செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். ஏற்கனவே தாக்கல் செய்த ITR-ல் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபட்ட விவரங்கள் இருந்தால், அதை திருத்தி இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் ₹1,000 – ₹5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்டு, காலக்கெடுவை நீட்டிக்க பலரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
News December 31, 2025
கனவிலும் நீயே ரித்தி குமார்

ராஜா சாப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரித்தி குமார், தனது லேட்டஸ்ட் போட்டோஸை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற சேலையில், கையில் ரோஜாவுடன் இருக்கும் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரித்தி, வெள்ளை நிறமே, விழியில் பாதி உள்ள நிறமே, கனவிலும் உந்தன் நிறமே என்று பாட வைக்கிறார். இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 31, 2025
கண் பார்வையை கூர்மையாக்கும் உணவுகள்

உங்கள் கண் பார்வை கூர்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க சரியான ஊட்டச்சத்து தேவை. தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கண்கள் ஓயாமல் வேலை செய்கிறது. நவீன வாழ்க்கையில் இளம் வயதினர் பலரும் கண் பார்வை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், கண்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்ற உணவுகளை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


