News April 4, 2025
மிட்செல் மார்ஷின் விசித்திர சாதனை

லக்னோ – மும்பை இடையேயான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியின் தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் வித்தியாசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். பவர்-பிளேவில் வீசப்பட்ட 36 பந்துகளில் அவர் மட்டுமே 30 பந்துகளுக்கு பேட்டிங் செய்துள்ளார். அதில், அதிரடியாக 60 ரன்களையும் அவர் விளாசினார். ஆனால், பவர்-பிளே முடிந்தவுடனே அவர் ஆட்டமிழந்துவிட்டார். IPL வரலாற்றில், பவர்-பிளேவில் அதிக பந்துகளை சந்தித்த வீரர் ஆனார் மார்ஷ்.
Similar News
News September 19, 2025
மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுக்க…

☛நீரை கொதிக்க வைத்து ஆறிய பின் குடியுங்கள். ☛ஓட்டல் உணவுகளை தவிருங்கள். ☛குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் உட்கொள்வதை தவிருங்கள். ☛சைனஸ் தொந்தரவு உள்ளவர்கள் உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் சளி பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். ☛தெருவில் விற்கும் உணவுகள், நீண்டநாள் ஆன ஸ்நாக்ஸ்களை தவிர்ப்பது நல்லது. ☛நிலவேம்பு, பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை இலை, சுக்கு போன்றவற்றில் கசாயங்களை எடுப்பது நல்லது.
News September 19, 2025
ரோபோ சங்கரின் சாவுக்கு இதுதான் காரணமா..!

தீவிர மது பழக்கமே ரோபோ சங்கரின் உயிரை குடித்திருப்பதாக ஒருபுறம் சொல்லப்பட்டாலும், அவரது மரணம் தொடர்பாக நடிகர் இளவரசு புது தகவலை வெளியிட்டுள்ளார். ஆரம்பத்தில் ரோபோ போன்று நடிக்க உடலில் அவர் சில்வர் பெயிண்ட் பயன்படுத்துவார். மண்ணெண்ணெய் ஊற்றியே அதனை நீக்க முடியும். அதனால், தோல் வலுவிழந்து, அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டதாக இளவரசு தெரிவித்துள்ளார். இதுபோன்று கெமிக்கல் பயன்படுத்துவோர் கவனமா இருங்க!
News September 19, 2025
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள புகைப்படங்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.