News March 1, 2025
அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடும் நடிகர்

பாஜக தலைவர் அண்ணாமலையை முதல்வராக்க பாடுபடுவேன் என்று நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் பேசியுள்ளார். தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக் கொண்ட அவர், அண்ணாமலையுடன் இணக்கமாக இருக்கிறார். இந்நிலையில், அடுத்த பாஜக தலைவர் ஆகும் எண்ணம் இல்லையென்றும் இறுதி வரை கட்சிக்காக உழைப்பேன் என்றும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News March 26, 2026
BREAKING: திமுக கூட்டணியில் விலகுகிறார்

திமுக கூட்டணியில் உள்ள கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு அதிருப்தியில் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவளித்த கருணாஸ், தமிமுன் அன்சாரிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், தனியரசுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
வேல்முருகன் கூறுவது அபாண்டம்: SS சிவசங்கர்

துரைமுருகனால் கூட CM-ஐ சந்திக்க முடியவில்லை என்று சொல்லும் வேல்முருகன், அதை 1 மாதத்துக்கு முன்பே கூறியிருக்கலாமே என சிவசங்கர் பேசியுள்ளார். வேல்முருகன் கூறுவது அபாண்டமான குற்றச்சாட்டு என்ற அவர், கேட்ட இடங்களை தராவிட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாமா என கேட்டுள்ளார். நன்றாக பணியாற்றுபவர் யாராக இருந்தாலும் அவர்களை CM எப்போதும் அங்கீகரிப்பார் எனவும் தெரிவித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
கலப்பட உணவா.. இந்த WhatsApp நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

நீங்கள் சாப்பிடும் ஹோட்டலில் உள்ள உணவு தரத்தில் குறை இருந்தாலோ, கலப்படம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டாலோ, உடனே ‘94440 42322’ என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் புகாரை அனுப்புங்க. தமிழக அரசின் ‘நடமாடும் உணவு ஆய்வு வாகனம்’ ஸ்பாட்டுக்கு வந்து விசாரணை மேற்கொள்ளும். இச்சேவை சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் கிடைக்கிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


