News April 1, 2024
ரூ.16,500 கோடி சொத்துகள் வைத்திருக்கும் நடிகர்

உலகின் பணக்கார நடிகராக புராக் பியர்ஸ் திகழ்கிறார். மைட்டி டக்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், 17 வயதில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு டிஜிட்டல் பொழுதுபோக்கு துறை, இணையதள விளையாட்டு நிறுவனம், பிட் காயின் நிறுவனம் உள்ளிட்டவற்றை தொடங்கி, ரூ.16,500 கோடி சொத்துகள் குவித்துள்ளார். விரைவில் ரூ. 8.000 கோடியை நன்கொடை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.
Similar News
News August 12, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 12 – ஆடி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை.
News August 12, 2025
விவசாயிகளை திமுக பழிவாங்குகிறது: இபிஎஸ்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குவதாக இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பேசிய அவர், பெங்களூரு சென்று மலர்களை விற்பதை தடுக்கும் வகையில் ₹20 கோடியில் சர்வதேச ஏல மையத்தை கடந்த அதிமுக ஆட்சியில் இப்பகுதியில் அமைத்தோம், ஆனால் தற்போது அது பூட்டிக்கிடப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியே இதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
News August 12, 2025
இல.கணேசனுக்கு 3வது நாளாக தீவிர சிகிச்சை

நாகாலாந்து கவர்னர் இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக. 8-ம் தேதி வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் காயமடைந்த அவர், சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ICU-வில் 3-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்கள் குழுவினர் இல. கணேசனின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.