News June 15, 2024
ஜூலை 5இல் தொடங்குகிறது 8ஆவது சீசன் TNPL போட்டி

8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) கிரிக்கெட் போட்டிகள், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் நடத்தப்படும் TNPL கிரிக்கெட் போட்டிக்கு உள்ளூர் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சென்னை, சேலம், கோவை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர்,மதுரை, திருச்சி ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கும். சென்னை உள்பட 5 முக்கிய நகரங்களில் போட்டி நடைபெறும்.
Similar News
News March 2, 2026
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. தமிழக அரசு கொடுத்த அப்டேட்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தேர்தல் வருவதால் அனைத்து வகுப்புகளுக்கும் முழு ஆண்டு தேர்வுகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 2-ம் வாரத்திற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வை முடித்துவிட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
News March 2, 2026
சின்னம்மை பாதிப்பு… சுகாதாரத்துறை எச்சரிக்கை

கோடை வெப்பத்தில் ஏற்படும் சின்னம்மை பாதிப்பு பிப்., இறுதியிலேயே TN-ல் தொடங்கிவிட்டதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சின்னம்மை பாதிப்பு உள்ள குழந்தைகளை முழுமையாக குணமடையும் வரை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, சின்னம்மை பாதிப்பு இருந்தால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
News March 2, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து.. நடிகர் ஆரியின் ரியாக்ஷன்

விஜய் – சங்கீதா விவகாரம் ஹாட் டாபிக்காக உள்ள நிலையில், தற்போது சினிமா நட்சத்திரங்கள் சிலர் அது குறித்து கருத்து கூற தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து நடிகர் ஆரியிடம் கேட்டபோது, விஜய் மட்டுமின்றி யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என தெரிவித்தார். SM வளர்ச்சி தனிமனித விமர்சனத்தை அபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


