News October 6, 2024
182 ஆண்டுகால பந்தயம் நிறைவுக்கு வந்தது

சிங்கப்பூரில் 182 ஆண்டுகளாக நடைபெற்று வந்த குதிரை பந்தயம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மலேசியாவுடன் சிங்கப்பூர் இணைந்திருந்த காலத்தில் இருந்தே அங்கு 124 ஹெக்டேர் பரப்பில் மைதானம் அமைத்து குதிரைப் பந்தயம் நடைபெற்று வருகிறது. தற்போது தனிப்பெரும் நாடாக வளர்ந்துள்ள சிங்கப்பூரில், வீடு கட்டுவதற்கு நிலம் தேவைப்படுவதால் குதிரை பந்தய மைதானத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
Similar News
News August 14, 2025
தூய்மை பணியாளர்களை சந்தித்த தமிழிசை மீது வழக்கு

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை சந்திக்க கிளம்பிய தமிழிசை அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இருப்பினும் தடையை மீறி போராட்டக்களத்துக்கு சென்று தனது ஆதரவை தெரிவித்தார். போலீசார் தனது வீட்டை சுற்றி வளைப்பது எப்படி ஜனநாயகமாகும் என பேட்டியில் கேட்டிருந்தார். இந்நிலையில், கோர்ட் உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக கூறி தமிழிசை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 14, 2025
கழிப்பறையிலும் திமுக ஊழல்: இபிஎஸ்

ஒரு நாளைக்கு ஒரு கழிப்பறையை தூய்மை செய்ய ₹800 என ₹1,000 கோடிக்கு சென்னையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கழிப்பறையிலும் திமுக ஊழல் செய்திருப்பதாகவும் விமர்சித்தார். ஸ்டாலின் எதிர்க்கட்சியில் இருந்தபோது தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு சென்று, அவர்களுடன் தேநீர் சாப்பிட்டு ஆதரவாக பேசினார். ஆனால் தற்போது அவர்கள் போராட்டத்தை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்றும் கூறினார்.
News August 14, 2025
ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தரும் அம்பிகை!

தஞ்சாவூர், திருச்சத்தி முற்றம் சிவக்கொழுந்தீசர் கோயிலில் அம்பிகை ஈசனை கட்டியணைத்தபடி காட்சி தருகிறார். தன்னை நினைத்து தவம் இருந்த அம்பிகையை சோதிக்க நினைத்த ஈசன், ஜோதி ரூபமாக காட்சி தந்தார். ஒற்றை காலை கீழும், மற்றொரு காலை ஜோதி ரூபத்தில் இருந்த ஈசன் மீதும் வைத்து, அம்பிகை ஈசனைத் தழுவினார். இக்கோயில் வழிபட்டால், மனக்கசப்பால் பிரிந்து போன தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என நம்பப்படுகிறது.