News September 27, 2025
இரவில் நிம்மதியாக தூங்க உதவும் 10-3-2-1 விதி!

இரவில் நிம்மதியாக தூங்க 10- 3- 2- 1 விதியை ட்ரை பண்ணுங்க ➤தூங்குவதற்கு 10 மணி நேரத்துக்கு முன் காபி, டீ போன்ற காஃபின் பானங்கள் குடிப்பதை நிறுத்துங்கள் ➤தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன் உணவு சாப்பிட்டு முடியுங்கள் ➤மன நிம்மதியாக தூங்க, வேலைகள் அனைத்தையும் தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே முடியுங்கள். ➤தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், டிஜிட்டல் சாதனங்கள் பயன்பாட்டை தவிருங்கள். SHARE.
Similar News
News September 27, 2025
உயிரிழப்புக்கு என்ன காரணம்?

விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 29 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் உயிரிழப்புகளை தடுத்து இருக்கலாம். குறிப்பிட்ட நேரத்தை விட விஜய் 5, 6 மணிநேரம் தாமதமாக வந்தது, குறுகிய இடத்தில் ஆயிரக்கணக்கில் கட்டுப்பாடில்லாமல் மக்கள் திரண்டது, எச்சரிக்கையை மீறி குழந்தைகளை அழைத்து வந்தது – இவற்றை தவிர்த்திருந்தால், உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.
News September 27, 2025
BREAKING: கரூரில் பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் சடலங்களை பார்த்து உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சிகள் காண்போரையும் கண்கலங்க வைக்கிறது.
ஆம்புலன்ஸ்கள் தொடர்ந்து ஹாஸ்பிடலை நோக்கி வந்து கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.
News September 27, 2025
விஜய் இத்துடன் நிறுத்திக் கொள்வது நல்லது: பொன்னார்

அதிமுக – பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விஜய் விமர்சித்ததை பொன்.ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். விஜய் இன்று பிறந்த குழந்தை எனவும், இந்த விஷயத்தை இத்துடன் விடுவது அவருக்கு நல்லது என்றும் எச்சரித்துள்ளார். அதேபோல், விஜய்யின் பிரசாரம் அரசியல் போன்று இல்லை, அவர் சினிமாவில் நடிப்பது போலவே உள்ளதாகவும், அவருக்கு அரசியல் தெரியுமா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.