News September 28, 2025
விஜய் வீட்டுக்கு முன் குவியும் தவெக தொண்டர்கள்

கரூர் ஹாஸ்பிடலில் விடிய விடிய கதறல் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இந்த துயரத்திற்கு மத்தியில் விஜய் சென்னை வந்தடைந்த நிலையில், அவரின் வீட்டு முன், தவெக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். ஒருபுறம் போலீசார், மறுபுறம் தவெக தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால், பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தவெக முக்கிய நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வார்கள் என கூறப்படுகிறது.
Similar News
News January 8, 2026
8 போர்களை நிறுத்தியும் நோபல் பரிசு இல்லை: டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்காக நார்வே மீது தனது கோபத்தை டிரம்ப் வெளிப்படுத்தினார். தனியாக 8 போர்களை நிறுத்திய தன்னை, NATO உறுப்பினரான நார்வே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்காதது முட்டாள்தனமான செயல் என சாடினார். ஆனால், நோபல் தனக்கு ஒரு பொருட்டல்ல என்றும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றியதே போதும் எனவும் குறிப்பிட்டார். US இல்லை என்றால் NATO மீது சீனா, ரஷ்யாவுக்கு பயம் இருக்காது எனவும் கூறினார்.
News January 8, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: கண்ணோட்டம் ▶குறள் எண்: 574
▶குறள்:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
▶பொருள்: வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?
News January 8, 2026
‘ஜனநாயகன்’ மிகப்பெரிய வெற்றி பெறும்: சிபிராஜ்

தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிபிராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘ஜனநாயகன்’ படத்தை சுற்றி நடக்கும் விவகாரங்கள், அதனை பெரும் வெற்றிக்கு அழைத்து செல்லும் என தெரிவித்துள்ளார். மேலும் நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


