News April 29, 2025

தவெக கொடி வழக்கு..விஜய் பதிலளிக்க உத்தரவு

image

தவெக கொடியில் யானையை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென பகுஜன் சமாஜ் கட்சி(BSP) தொடர்ந்த வழக்கில் விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. BSP சின்னமாக யானை உள்ளதால் தவெக தனது கொடியில் யானைகளை பயன்படுத்தக் கூடாது என BSP வழக்குத் தொடர்ந்தது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு விஜய், புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவெக கொடிக்கு சிக்கல் வருமா, வராதா?

Similar News

News January 26, 2026

சீனா US-க்கு அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதா?

image

சீனாவின் அணு ஆயுதங்கள் குறித்த தொழில்நுட்பத் தரவுகளை, அந்நாட்டின் ராணுவ அதிகாரி ஜெனரல் ஜாங் யூக்ஸியா US-க்கு கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சம் வாங்கிக்கொண்டு தனது அதிகாரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்ததாக முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்பட்ட ஜாங் யூக்ஸியா மீதான இந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

News January 26, 2026

NDA-வின் முதல்வர் வேட்பாளர் யார்? தமிழிசை பதில்

image

மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் EPS-ஐ CM வேட்பாளர் என ஏன் ஒரு இடத்தில் கூட PM மோடி குறிப்பிடவில்லை என்ற கேள்விக்கு தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். NDA-வின் CM வேட்பாளராக EPS-ஐ அமித்ஷா அறிவித்துவிட்டதால், தினம் தினம் அதை பற்றி பேச வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார். பாஜக ஒருமுறை சொன்னால் ஆயிரம் முறை சொன்னது போல் எனவும், சொல்லாத அண்ணன் தினகரனே சொல்லிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

News January 26, 2026

பாஜக குறித்து விஜய் பேசாதது ஏன்? அருண்ராஜ் பதில்

image

தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், பாஜகவின் பெயரையே பயன்படுத்தவில்லையே என்ற கேள்விக்கு அருண்ராஜ் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு தேர்தல் களத்தில் இருக்கும் கட்சியை குறித்து மட்டுமே விஜய் பேசியதாக அவர் விளக்கமளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை எனவும், இந்த தேர்தலில் திமுக – தவெக இடையே மட்டுமே போட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!