News October 5, 2025
SC-ல் மேல்முறையீடு செய்த தவெக நிர்வாகிகள்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தலைமறைவாக உள்ள N.ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவும் உள்ளனர்.
Similar News
News October 5, 2025
காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை

2027 கோவா தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது என கூறிய அவர், கடந்த சில ஆண்டுகளாக MLA-க்களை பாஜகவுக்கு காங்கிரஸ் சப்ளை செய்து வருவதாக விமர்சித்துள்ளார். மேலும், எதிர்காலத்தில் காங்கிரஸ் MLA-க்கள் பாஜகவுக்கு தாவமாட்டார்கள் என மக்களுக்கு உறுதியளிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 5, 2025
நகை கடன்.. வந்தது புதிய அறிவிப்பு

நகை கடன் வாங்குபவர்கள், இனி அசல் & வட்டியை 12 மாதங்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும். முன்பு இருந்த, வட்டியை மட்டும் செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல கடனை செலுத்தியவுடன், 7 வேலை நாள்களுக்குள் அடகு வைத்த தங்கத்தை, கடன் கொடுத்த நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 5, 2025
கருர் நெரிசல் திட்டமிட்ட சம்பவம்: குஷ்பு

கரூர் சம்பவம் தொடர்பாக CBI விசாரணையில் இருந்து CM பின்வாங்கியது ஏன் என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், அரசின் அலட்சியமே நெரிசலுக்கு காரணம் எனவும் கூறியுள்ளார். விஜய்க்கு அதிக கூட்டம் கூடும் என தெரிந்தும் அரசு சரியான இடத்தை அவருக்கு ஒதுக்கவில்லை என்றும், இந்த விவாகரத்தில் CM மவுனமாக இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.