News January 7, 2025
இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிடவில்லை என்று விஜய் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத விஜய், இடைத்தேர்தலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தவெக போட்டியிடவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு; அதை நோக்கி தனது கட்சியின் பயணம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், திமுக +, அதிமுக +, நாதக, பாஜக + என 4 முனை போட்டி உருவாகியுள்ளது.
Similar News
News September 14, 2025
பாராட்டு விழாவை நம்ப முடியவில்லை: இளையராஜா

இசை உலக சரித்திரத்திலேயே ஒரு இசையமைப்பாளருக்கு <<17700409>>பாராட்டு விழா <<>>நடத்தியது தமிழக அரசுதான் என இளையராஜா தெரிவித்தார். சிம்பொனி இசையமைக்க செல்லும் முன்னே CM ஸ்டாலின் நேரில் வாழ்த்தியதாக கூறிய அவர், இன்று பாராட்டு விழா நடத்தியதை நம்ப முடியவில்லை என கூறினார். தனக்கு இசைஞானி என்ற பட்டத்தை முன்னாள் CM கருணாநிதிதான் கொடுத்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
News September 14, 2025
ஒரு நாள் லீவு போடுங்க… ஏன் தெரியுமா?

மாதத்தில் ஒரு நாளோ அல்லது உங்கள் துணைவர் எதிர்பார்க்காத ஒரு நாளிலோ லீவு எடுத்து, அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்துங்கள். வழக்கமான கடமைகளை ஒருநாள் தள்ளி வையுங்கள். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செல்லுங்கள். அது கடற்கரை, பூங்கா, சினிமா தியேட்டர் எந்த இடமாக வேண்டுமானாலும் இருக்கலாம். இருவரும் மனம்விட்டு ரிலாக்சாக பேசுங்கள். இது அன்றாட மனஅழுத்தங்களில் இருந்து விடுவித்து, உங்கள் உறவை வலுப்படுத்தும்.
News September 14, 2025
பாஜக அதிகாரத்தை பறிக்கிறது: விஜய்

தென் இந்தியாவின் அதிகாரத்தை பாஜக பறிக்கிறது என தேர்தல் பரப்புரையில் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். அரியலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், வாக்கு திருட்டு, தொகுதி மறுசீரமைப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களை கையிலெடுத்தார். பாஜக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவதாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் இந்தியாவிற்கு துரோகம் செய்கிறது எனவும் அவர் சாடினார்.