News September 5, 2024
திட்டமிட்டபடி செப்.23ல் தவெக மாநாடு

திட்டமிட்டபடி விக்கிரவாண்டியில் செப்.23ம் தேதி தவெக மாநாடு நடைபெறும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். பல்வேறு காரணங்களால் மாநாடு ஜனவரி மாதம் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அதில் உண்மையில்லை என்றும், மாநாட்டு பணிகள் விரைவுபடுத்தப்-பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அடுத்த வாரம் மாநாட்டு திடலை விஜய் பார்வையிட உள்ளதாகவும், முக்கிய பிரபலங்கள் இதில் பங்கேற்க உள்ளதாகவும் நிர்வாகிகள் கூறினர்.
Similar News
News August 4, 2025
CRPF வீரர் வீட்டில் கொள்ளை: அண்ணாமலை கண்டனம்

கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த 22.5 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இதுவரை நகை மீட்கப்படவில்லை என பெண் CRPF வீரர் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டார். இதுபற்றி பேசிய அண்ணாமலை, போலீஸ் உரிய நடவடிக்கை எடுக்காதனாலே வீடியோ பதிவிட வேண்டிய சூழலுக்கு அப்பெண் தள்ளப்பட்டார் என்றார். குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே சுற்றுவதும், தேசத்தை காக்க கூடியவர்கள் உதவிக்காக கெஞ்சுவதும் தான் திமுக மாடல் அரசு என்றார்.
News August 4, 2025
நீங்க இனிப்பு அதிகம் சாப்பிடுபவரா?

சர்க்கரை அதிகமுள்ள பானங்களை, ஒரு நாளைக்கு 2 முறை (அ) அதற்கு அதிகமாக அருந்துவோரின் சிறுநீரில் புரோட்டீன் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரகங்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலையை காட்டுகிறது. ஆகவே சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அவை தேநீர், காஃபி போன்றவையாக இருந்தாலும், சோடா, கோலா போன்ற கூல் டிரிங்ஸாக இருந்தாலும், குறைவாக அருந்துவது நல்லது. தவிர்ப்பது மிகவும் நல்லது.
News August 4, 2025
BREAKING: தவெக மாநாடு தேதி மாற்றம்

மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற இருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. அதனால், போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மதுரை எஸ்.பி. அலுவலகம் சென்ற புஸ்ஸி ஆனந்த், மாநாடு தேதியில் மாற்றம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 – 22-க்குள் ஏதேனும் ஒரு தேதியில் மாநாடு நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.