News February 22, 2025
தவெக ஆண்டு விழா: பாஸ் அனுப்ப விஜய் உத்தரவு

தவெகவின் முதலாம் ஆண்டு விழா வரும் 26 ஆம் தேதி ஈசிஆரில் உள்ள Confluence Centre-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் 2 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் முறையாக அழைப்பிதழும், ஆண்டு விழாவுக்கான பாஸூம் வழங்குமாறு தவெகவின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதனால், தவெகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமடைந்துள்ளனர்
Similar News
News February 22, 2025
IND-PAK நாளை மோதல்.. எந்த சேனலில் காணலாம்?

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் நாளை துபாய் மைதானத்தில் மோதவுள்ளன. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ், நாளை மதியம் 2 மணிக்கு போடப்படும். பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு போட்டி தொடங்கும். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரலையாகக் காணலாம். ஜியோ ஹாட்ஸ்டார் செயலியிலும் நேரலையாக போட்டியைக் காண முடியும்.
News February 22, 2025
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு

அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 215 பணியிடங்கள் காலியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் எனக் கூறப்பட்டுள்ளது. வேலையில் சேர விரும்புவோர் www.assamrifles.gov.in. இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும்.
News February 22, 2025
100 பெண்களுடன் டேட்டிங்.. பலே ஆசாமி கைது

டெல்லியைச் சேர்ந்த மனோஜ் கல்யாண், திருமண செயலி மூலம் கிடைத்த எண்களை கொண்டு 100 பெண்களுடன் பழகியுள்ளார். காவலாளியான அவர், மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி எனக் கூறி, திருமணம் செய்வதாக சொல்லி நம்ப வைத்துள்ளார். பின்னர் அவர்களிடம் இருந்து ஏடிஎம் அட்டை, கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ.3 கோடி வரை பணம் செலவழித்துள்ளார். 2 பெண்கள் அளித்த புகாரின்பேரில் விசாரித்த பாேலீஸ், கல்யாணை கைது செய்துள்ளது.