News January 10, 2025
ஈரோடு இடைத் தேர்தலில் தவெக போட்டியில்லை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடவில்லை. அண்மையில் தவெக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை, ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் பாலாஜி சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்தான் தவெகவின் இலக்கு என்று விஜய் தெரிவித்திருக்கிறார். ஆதலால் எந்த இடைத்தேர்தலிலும் தவெக போட்டியிடாது எனக் கூறியுள்ளார்.
Similar News
News January 16, 2026
உலக சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை!

தோஹாவில் நடந்துவரும் உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா, U19 உலக சாம்பியனான சீனாவின் கின் யுஷுவானை வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளார். விறுவிறுப்பான இந்த Round 64 சுற்றில் முதலில் பின் தங்கிய இறுதியில் அதிரடியாக ராக்கெட்டை சுழற்றி மணிகா 3-2 என்ற கணக்கில் அபாரமாக வென்றார். இதையடுத்து தனது அடுத்த சுற்றில் தென்
கொரியாவின் லீ யூன்ஹேவை சந்திக்க உள்ளார்.
News January 16, 2026
ஆண்மை குறைவு வரும்.. உடனே இதை நிறுத்துங்க!

நீண்ட நேரம் லேப்டாப்பை மடி மீது வைத்திருக்கும் மற்றும் நீண்ட நேரம் (4 Hr-க்கு மேல்) பேன்ட் பாக்கெட்டில் மொபைல் போன் வைத்திருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைவதாக கொல்கத்தா பல்கலை., ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இந்த ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் ரிஸ்க், மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமாவதாக எச்சரிக்கின்றனர். மொபைல், லேப்டாப் பயன்படுத்தும் ஆண்களே, உஷார்!
News January 16, 2026
சமூக அநீதியின் அடையாளம் திமுக அரசு: அன்புமணி

சமூகநீதிக்கு நிறைய துரோகங்களை செய்து விட்டு, சமூகநீதியைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத்தது போல CM பேசுவது கண்டிக்கத்தக்கது என அன்புமணி சாடியுள்ளார். பட்டியலின மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கலாம் என்று SC ஆணையிட்டும், இந்த விஷயத்தில் திமுக அரசு மெளனம் காக்கிறது என்றும், சமூக அநீதியின் அடையாளமான இந்த அரசு, சமூகநீதி என்ற உன்னத சொல்லை உச்சரிக்கும் தகுதியை எப்போதோ இழந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.


