News April 19, 2024
மக்களுக்கு தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்

தேர்தலில் அனைவரும் வாக்களிக்குமாறு தவெக தலைவர் விஜய் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று காலையிலேயே அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். இந்நிலையில், தேர்தலில் வாக்களித்து நான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டேன். நீங்களும் உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையை ஆற்றுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News May 7, 2025
ISC 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தது

தமிழகம் முழுவதும் ISC 12-ம் வகுப்பு தேர்வை 79 பள்ளிகளில் 3,052 பேர் எழுதியிருந்தனர். இதற்கான தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் மாணவிகளே சாதனை படைத்துள்ளனர். மாணவிகள் 100% பேர் தேர்வு ஆகியுள்ளனர். மாணவர்கள் 99.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் ISC 12-ம் வகுப்பு தேர்ச்சியில் மொத்தம் 99.97% ஆகும். நீங்கள் ரிசல்ட் பார்த்து விட்டீர்களா? தேர்ச்சியா? இல்லையா?
News May 7, 2025
BJP ப்ளானை முறியடித்ததால் சாதிவாரி கணக்கெடுப்பு

கடந்த மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களில் வென்றிருந்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 400 இடங்களை வெல்ல வேண்டும் என்ற பாஜகவின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் முறியடித்துவிட்டன. இல்லையென்றால், தற்போது சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்கள் எனத் விமர்சித்துள்ளார்.
News May 7, 2025
சற்றுமுன்: வாக்காளர் அட்டையில் முக்கிய மாற்றம்

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், வாக்காளர்கள் வசதிக்காக 3 முக்கிய மாற்றங்களை செய்ய தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் பெயர்களை உடனடியாக நீக்கவும், பூத் சிலிப்களில் தொகுதி, வாக்கு செலுத்தும் இடம் உள்ளிட்டவைகளை பெரிய அளவில் அச்சிடவும், BLO எனப்படும் பூத் அளவிலான அதிகாரிகளின் அடையாள அட்டைகளை மாற்றியமைக்கவும் திட்டமிட்டுள்ளது.