News April 19, 2025
அதிமுகவில் இணைந்த தவெக மாவட்ட பொறுப்பாளர்!

TVK ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதனை, ADMK IT விங் பதிவிட்டுள்ளது. விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், அவரது கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் கூறுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 16, 2025
இலங்கை பிரதமரிடம் பேசுங்கள்: PM-க்கு CM கடிதம்

இந்தியா வந்துள்ள இலங்கை PM ஹரிணி அமரசூர்யாவிடம், கச்சத்தீவை மீட்பது தொடர்பாக பேச வேண்டும் என்று, PM மோடியிடம் CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை சம்பவங்களை தடுத்தல் தொடர்பாக இலங்கை பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
News October 16, 2025
தீபாவளி ஸ்பெஷல் வண்ணக் கோலங்கள்!

தீபாவளிக்கு வீட்டு வாசலில் போடும் அழகான கோலங்களும் அப்பண்டிகையின் சிறப்பாகும். தீபாவளியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் என்ன கோலம் போட்டிருக்கு என்று பார்ப்பதே பலருக்கும் பிடித்த ஒரு விஷயம். அப்படி வீட்டு வாசலை அலங்கரிக்கும் அழகான கோலங்கள் உங்களுக்காக… SWIPE செய்து பாருங்க…
News October 16, 2025
தீபாவளி விடுமுறை.. இன்று முதல் தொடங்கியது!

தீபாவளி விடுமுறைக்கு ஊர்களுக்குச் செல்வதற்கான சிறப்பு பஸ்கள் இன்று(அக்.16) முதல் தொடங்கியுள்ளன. இதற்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி சுமார் 2 லட்சம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். சிறப்பு பஸ் இயக்கம் குறித்து மக்கள் அறிய, 94459 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகாரளிக்கவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது. SHARE IT.